உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு முன்னேறினார் முகேஷ் அம்பானி..!
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த சில நாட்களாகப் பெருமளவிலான சரிவைச் சந்தித்தாலும், ஜனவரி மாதத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு மட்டும் சுமார் 3 சதவீத உயர்வை எட்டியுள்ளது. இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 79.2 பில்லியன் டாலர் வரையிலான உயர்ந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முகேஷ் அம்பானி ஜனவரி மாதத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவரான லேரி எலிசன் மற்றும் லொரியல் நிறுவனத்தின் தலைவரும், உலகின் பணக்கார பெண்ணாக விளங்கும் Francoise Bettencourt Meyers ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 5.78 லட்சம் கோடி ரூபாய், அதாவது 79.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான ஸ்டீவ் பால்மர் 81.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 11வது இடத்தில் இருந்து முன்னேறி 10வது இடத்திற்கு முன்னேறி, டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில் சந்தை கணிப்புகளை உடைத்து சுமார் 12.5 சதவீத வளர்ச்சியில் சுமார் 13,101 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. ஆனால் வருவாய் 22 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்கு மதிப்பு குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.
https://tamil.goodreturns.in/news/mukesh-ambani-moved-up-11th-position-in-world-s-richest-billionaires-list-022240.html
Nice
ReplyDelete